சென்னை;
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கூட்டணி என்பது தேர்தல் வரும்போது அமைப்போம். எங்களது கொள்கை நிரந்தரமானது. எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். எங்கள் மீது கரிசனம் வேண்டாம்.
அதிமுக எப்போதும் தன்மானத்தை இழக்காது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் கோடி கடன் பெற்றதாக தெரிகிறது.
நிதி மேலாண்மை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு என்ன அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளது? அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை.
பட்ஜெட் மீதான அமைச்சரின் பதிலுரை ஏமாற்றம் தருகிறது. பட்ஜெட் கணக்கை நீங்கள் பாருங்கள், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் அக்கறை காட்ட தேவையில்லை.
எங்கள் கணக்கை எப்படி பார்ப்பது என எங்களுக்கு தெரியும். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என கூறினார்.