2026 ம் ஆண்டுக்கான தேர்தல் அதிமுக – திமுக இடையே உண்டான தேர்தல், இரு கட்சிகளுக்கு மட்டுமே போட்டி இருக்கும் – ராஜேந்திர பாலாஜி!!

சென்னை ;
2026 ம் ஆண்டுக்கான தேர்தல் அதிமுக – திமுக இடையே உண்டான தேர்தல், இரு கட்சிகளுக்கு மட்டுமே போட்டி இருக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பதி கோயிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவதன் மூலம் ஒரு மன நிறைவு, நம்பிக்கை ஏற்படுகிறது.

அந்தந்த கட்சி தலைவர்கள் அவர்களுடைய தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகையில் பேசுவது வழக்கம். அவ்வாறு விஜய் பேசுகிறார்.

தொண்டர்களை ஊக்கப்படுத்துவது என்பது வேறு, தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது வேறு. அதிமுக கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடப்பாடியார் ஒருவரே எடுப்பார்.

2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தல் திமுக – அதிமுகவிற்கான தேர்தல் என்பது ஊர், நாடு, உலகம் அறிந்தது. மக்கள் மத்தியில் ஊழல் குறித்த சர்ச்சை பரவலாக பேச தொடங்கி விட்டனர்.

எனவே 2026 ஆண்டிக்கான தேர்தல் அது அதிமுகவிற்கான தேர்தலாக இருக்கும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *