பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்-மும்பை ஐகோர்ட்டு நடவடிக்கை!!

மும்பை,
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு எதிராக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.சோனக், ஜிதேந்திர ஜெயின் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கூறுவது ஒரு செயற்கை அவசரமாகும்.

இப்படி செய்வதன் மூலம் வழக்கை விசாரிக்கும் வசதியை மனுதாரர் பெற முடியாது. எனவே மனுவை அவசரமாக விசாரிக்க கோரிய அனில் அம்பானியின் விண்ணப்பத்தை அமர்வு நிராகரிக்கிறது.

அதுமட்டும் இன்றி ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதிக்கிறது” என்று உத்தரவிட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *