தெரு நாய்​களால் பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!!

புதுடெல்லி:
டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களால் பலர் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன.

இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்​தர​விட்​டது.

இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்​கள், சமூக ஆர்​வலர்​கள் பலர் கண்​டனம் தெரி​வித்து போராட்​டங்​கள் நடத்​தினர்.

நாடு முழு​வதும் இந்த விவ​காரம் பெரும் சர்ச்​சை​யானது. இது உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கவாய் கவனத்​துக்கு சென்​றது. இதையடுத்து நீதிபதி விக்​ரம் நாத் தலை​மை​யில் 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்​வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்​தர​விட்​டார்.

இந்த வழக்கை விசா​ரித்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நீதிபதி விக்​ரம் ​நாத் வெளி​யிட்ட தீர்ப்​பில், ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் பிடிக்​கப்​பட்ட நாய்​களுக்கு தடுப்​பூசி போட்டு பிடித்து இடங்​களி​லேயே விட வேண்​டும். தெரு நாய்​களுக்கு பொது​மக்​கள் பொது இடங்​களில் கண்​டிப்​பாக உணவளிக்க கூடாது.

தெரு நாய்​களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநக​ராட்சி ஏற்​பாடு செய்ய வேண்​டும். அங்கு ‘நாய்​களுக்கு உணவளிக்​கும் இடம்’ என்ற அறி​விப்பு பலகைகளை வைக்க வேண்​டும்’’ என்று உத்​தர​விட்​டார். இந்த தீர்ப்பை ஏராள​மானோர் வரவேற்​றனர்.

இந்​நிலை​யில், கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற நீதிபதி விக்​ரம் நாத் நேற்​று ​முன்​தினம் பங்​கேற்று பேசி​ய​தாவது:

தெரு நாய்​கள் தொடர்​பான வழக்கை விசா​ரித்​தன் மூலம், இந்​தி​யா​வில் மட்​டுமல்​லாமல், வெளி​நாடு​களி​லும் நான் பிரபல​மாகி இருக்​கிறேன். எதிர்​பா​ராத வித​மாக நான் பிரபல​மாகி இருக்​கிறேன்.

பலரும் எனக்கு பாராட்டு தெரி​வித்​தனர். நீதித் துறை​யில் நான் பணி​யாற்றி வரு​வது இந்த துறை​யில் இருப்​பவர்​களுக்கு தெரி​யும். ஆனால், இன்று பரவலாக அறியப்​பட்​டிருக்​கிறேன். இதற்​காக தெரு நாய்​களுக்​கும் நான் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த வழக்கை எனது அமர்​வுக்கு ஒதுக்​கிய தலைமை நீதிபதி கவாய்க்​கும் நான் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். வெளி​நாடு​களில் இருந்து எனக்கு பாராட்டு தெரி​வித்​தவர்​களுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு நீதிபதி விக்​ரம்​நாத் நகைச்​சுவை​யாக பேசி​னார்.

வரும் 2027-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் உச்ச நீதி​மன்ற தலை​மை நீதிப​தி​யாக விக்​ரம்​ நாத்​ பொறுப்​பேற்​க உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *