சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றில் தோல்வியடைந்த ஆகர்ஷி காஷ்யப்!!

சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.

முதல் செட்டை 19-21 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி இழந்தார். இதனால் 2-வது செட்டை வெல்ல கடுமையாக போராடிய அவர் 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 19-21, 20-22 என்ற கணக்கில் முதல் சுற்றில் ஆகர்ஷி தோல்வியடைந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *