விஜய்க்கு நன்றாக நடிக்கவும், வசனம் பேசவும், நடனம் ஆடவும் தெரியும்; ஆனால் அரசியல் அல்லது பொருளாதாரம் எதுவும் அவருக்கு தெரியாது,” – தமிழிசை..!

சென்னை:
கேஸ் விலை ஏற்றம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த அறிக்கைக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.

“எங்கள் மாநில தலைவர் அறிக்கையை பாருங்கள். விஜய்யின் அறிக்கையை பாருங்கள். தெளிவாக எவ்வளவு ஏறி இருக்கிறது, எவ்வளவு குறைத்திருக்கிறோம் என்பது தெரியும். இப்போது தவிர்க்க முடியாத காரணங்களால் விலை ஏற்றப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு சினிமா டிக்கெட் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? இப்போது பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் விலை என்ன? விஜய் படங்களின் டிக்கெட்டின் விலை என்ன? இதை கட்டுப்படுத்த முடிந்ததா உங்களால்?

‘பாமர மக்களுக்காக நடிக்கிறேன்’ என்று சொல்லும் விஜய், பாமர மக்களுக்காக குறைந்த விலையில் அல்லது இலவசமாக டிக்கெட் கொடுக்கலாமே! யார் ‘வேண்டாம்’ என்று சொன்னது? உங்களுக்கு லாபம் என்றால் பேச மாட்டீர்கள். ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றவர்கள் பேச வேண்டாம்.

பிளாக் டிக்கெட் மட்டுமின்றி சினிமா டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டது. விஜய்க்கு நன்றாக நடிக்கவும், வசனம் பேசவும், நடனம் ஆடவும் தெரியும். ஆனால் அரசியல் அல்லது பொருளாதாரம் எதுவும் அவருக்கு தெரியாது,” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *