சென்னை;
ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.
குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்சர், போர் என பவுண்டர்கள் விளாசி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார்.
ரன் ஓட முயன்றபோது பும்ரா மீது கருண் நாயர் மோதினார். இதனையொட்டி டைம் அவுட் நேரத்தில் கருண் நாயரிடம் பும்ரா வாங்கிக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் கருண் நாயர் பேசினார்.
இந்த வாக்குவாதத்திற்கு நடுவே ரோகித் மைதானத்தில் சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.