சென்னை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றினால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடைகளின் பெயர் மற்றும் அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
துறைத்தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு, பிற அலுவலங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.