கவர்னருக்கு எதிரான வெற்றியை நாம் மற்றவர்களுக்கும் பயன்படும்படி கொண்டாட வேண்டும் – கமல்ஹாசன் பேட்டி!!

சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.


பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே அந்த வெற்றியை பெற்ற இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவர்கள் போட்ட வழக்கில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால் அந்த கொண்டாட்டத்துக்காக நான் இங்கு வந்து முதலமைச்சரை சந்தித்தேன்.

தேசிய அளவில் இந்த வெற்றியை நாம் மற்றவர்களுக்கும் பயன்படும்படி கொண்டாட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசவில்லை.

மேல்சபை எம்.பி. சீட் தொடர்பாக பேச வரவில்லை. அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *