சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதலே சொற்ப ரன்களின் அவுட்டாகி வந்த ரோகித் சர்மா, இந்த போட்டியில் 76 ரன்கள் விளாசி ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார். இதனால் ‘ஹிட்மேன் இஸ் பேக்’ என்று மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.