சென்னை:
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. அத்திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் வெளியானது.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மாரி செல்வராஜ்- தனுஷ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் தனுஷ் நடித்த அம்பிகாபதி, மரியான், ராயன் ஆகிய திரைப்படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் தனுஷ் – ஏ.ஆர் ரஹ்மான் – மாரி செல்வராஜ் கூட்டணியின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.