சென்னை:
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
“குபேரா” திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் தனுஷ் அவர் மீது சுமத்தும் நெகடிவ் விமர்சனங்களை மற்றும் வதந்திகளை பற்றி மிகவும் எமோஷனலாக பேசினார்.
அதில் அவர் பேசியது ” இருட்டுல நான் வழி தவறி தொலைந்து போகும் போது என்னுடைய ஒவ்வொரு ரசிகனும் தீப்பந்தம் ஏந்தி என்னை வழிநடத்தி கூட்டி செல்கிறார்கள்.
என்னை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்கள். ஒவ்வொரு முறையும் என் திரைப்படம் வெளியாகும் 1 மாதம் முன் எதாவது வதந்திகளை நீங்கள் பரப்புங்கள் ஆனால் என் ரசிகர்களின் உதவியுடன் நான் மேலே சென்று கொண்டே இருப்பேன்.
இங்கு இருப்பவர்கள் எல்லாம் என் ரசிகர்கள் மட்டும் அல்ல. 23 வருடங்களாக என்னுடைய வாழ்க்கை துணையாக இருப்பவர்கள். இதை நீங்க காலி பண்ணனும் நினைத்தீர்கள் என்றால் அது உங்களின் முட்டாள் தனம். உங்களால ஒரு செங்கலக்கூட ஆட்ட முடியாது.
எண்ணம் போல் வாழ்க்கை’ என கூறினார். இவர் மறைமுகமாக நயன்தாராவை தாக்கிதான் பேசினார்கள் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.