வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும் – சசிகலா!!

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சசிகலா மற்றும் அவரது தம்பி திவாகரன் ஆகியோர் சாமிதரிசனம் செய்ய வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார். தற்போதைய அரசு பஸ்களில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். அரசு பஸ்களின் நிலை மோசமாக தான் உள்ளது.


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.

அதற்கு ஆண்டுதோறும் வட்டி கட்டி கொண்டிருந்தால் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்க முடியும். இவர்கள் வட்டி கட்ட முடியாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.

மேலும் இவர்கள் திட்டங்களை கொண்டு வந்து அதில் பெருமளவு கமிஷன் பெற்று கொள்கிறார்கள். அப்படி கமிஷன் பெறுவதால் ஒப்பந்ததாரர்களால் அந்த பணியை முடிக்க முடியவில்லை.

பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது. பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றிய பிறகு 3 மடங்கு, 4 மடங்கு வரிகட்டும் நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.

தி.மு.க. அரசு ஒவ்வொரு பொதுமக்களின் வீட்டை தட்டி வரி வசூலிப்பதிலேயே குறியாக உள்ளது. சொத்துவரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்திவிட்டது.

இதனால் விலைவாசி அதிகமாக உயர்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தி.மு.க. அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *