11 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்சிபி!!

பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். பில் சால்ட் 26 ரன்னும், டிம் டேவிட் 23 ரன்னும், ஜிதேஷ் சர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 19 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 49 ரன்னில் அவுட்டானார்.

நிதிஷ் ரானா 28 ரன்னும், ரியான் பராக் 22 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். அவர் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி திரில் வெற்றி பெற்றது. இது ஆர்சிபி அணியின் 6வது வெற்றி ஆகும். ராஜஸ்தான் அணியின் 7வது தோல்வி இதுவாகும்.

ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், குருணால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *