ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படவுள்ளது.

டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மேட்டூர் அணையின் நீரை நம்பியே உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் மாதத்தில் ஒருமுறை திறக்கப்படும். இந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-ல் திறக்கப்படவுள்ளது.

மேட்டூர் அணை வழக்கமான தேதியில் திறக்கப்படுவதால், இந்த ஆண்டு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *