ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது – திருமாவளவன்!!

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

இதன்பின்னர் பேசிய திருமாவளவன், திமுகவில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே கேலி பேசுகிறார்கள்.

பாஜக, பாமக கட்சியுடன் கூட்டணி இல்லை. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.


இப்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜயுடன், புத்தக வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த போது, அது தவறான யூகத்தை ஏற்படுத்தும் என்றும், இப்போது உள்ள அணி பாதிக்கப்பட்டு அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்பதால் அந்த விழாவைக்கூட தவிர்த்தேன்.

அவருடைய மனது நம்முடன் இருக்கும் என்று அப்போது விஜய் கூறினார். நான் நினைத்திருந்தால் விஜய்க்கான கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று கூறியிருக்க முடியும். ஆனால் அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.


ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *