சினிமா படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது – விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என மகேஷ்பாபு அமலாக்கத்துறைக்கு கடிதம் !!

சென்னை:
தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.

இவர் நடித்து கொடுத்த பில்டர்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்றியுள்ளதாக சில வாரங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்ததால் மகேஷ் பாபுவிறுகு அமலாக்கத்துறை சம்மனை அனுப்பியது.

விளம்பர படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார். இதில் ரூ.2.50 கோடி ரொக்கமாகவும், மீதம் உள்ள பணம் வங்கிக் கணக்கில் பெறப்பட்டது.


பணம் பெற்றது சம்பந்தமாக நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என மகேஷ்பாபு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டைவனையின்படி சினிமா படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது. விசாரணைக்கு ஆஜராக வேறு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *