“அஜித் குமார் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்” – ஹீரா குற்றச்சாட்டு!!

சென்னை;
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று அஜித் குமாருக்கு இந்திய கவுரவ விருதான பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவர் வழங்கினார். விருது பெற்ற அஜித்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர்.

மறுபக்கம் முன்னாள் நடிகையான ஹீரா அஜித்தை பற்றி பல விஷயங்களை பற்றி பேசி அவரது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவு மிகவும் வைரலானது. இதைப்பற்றி நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஹீரா 90 களில் முன்னணி நடிகையாவார்.பல முன்னணி இயக்குனர்கள் படத்திலும், மணி ரத்னம், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹீராவுடன் அஜித்குமார் தொடரும், காதல் கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்பொழுது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு ஒன்றாக காதலித்து வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின் சில மன கசப்பு காரணங்களால் பிரிந்தனர்.

தற்பொழுது ஹீரா அவரது பதிவில் கூறியதாவது “அஜித் குமார் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார், என் மீது பகிரங்கமாக பழி சுமத்தி சினிமாவை விட்டு போகும் படி செய்து விட்டார்” என ஹீரா சொல்லி இருப்பது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை ஹீரா இந்த பதிவை கடந்த ஜனவரி மாதம் எழுதி இருக்கிறார். அதில் “நான் ஒரு நடிகருடன் நெருங்கிய உறவில் நீண்ட காலம் இருந்தது எல்லோருக்குமே தெரியும். கடைசியில் அந்த நடிகர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி எங்களுக்கு பொதுவானவரை வைத்து இந்த விஷயத்தை சொன்னார்.

நான் ரொம்பவும் கெஞ்சி, கதறி அழுது இது உண்மையா என கேட்டேன். அதற்கு நான் வேலைக்காரி மாதிரி இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன், அப்போதுதான் அவளை யாரும் பார்க்க மாட்டார்கள், நான் விருப்பப்பட்ட மாதிரி எந்த பெண்ணுடனும் வாழ்வேன்” என சொன்னதாக ஹீரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

மேலும் நான் போதைப் பொருளுக்கு அடிமையானதாய் அந்த நடிகர் தவறான தகவலை பரப்பி தன்னுடைய பெயரை மக்கள் முன்னிலையில் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் தனக்கு ஆபரேஷன் நடந்தது என அவர் சொல்வதெல்லாம் மக்களிடையே தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

அவருடைய கஷ்ட காலங்களில் நான் இரவு பகல் பாராது அவருடன் துணையாக இருந்தேன். ஆனால் கடைசியில் என்னை நிற்கதியாக விட்டுவிட்டார் என ஹீரா சொல்லி இருக்கிறார்.

இதில் அவர் அஜித்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் சினிமாவில் காதலித்தது அஜித் தான் என்பதால் எல்லோரும் அவர் அஜித்தை பற்றி தான் பேசுகிறார் என உறுதி செய்து இருக்கிறார்கள்.

இதனை ரசிகர்கள் பார்த்து சில பேர் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவை டேக் செய்து வருகின்றனர். ஆனால் இப்பதிவு எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. நடிகை ஹீரோ பதிவிட்ட இணையத்தளம் தற்பொழுது இல்லை. அதனால் மிகவும் குழப்பமான சூழல் ஏற்பட்டு வருகிறது.
பலர் இதை அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்றனர் என பலவித கோணங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என அஜித் சொன்னால் மட்டுமே தெரியும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *