சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.
இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து பார்ம் அவுட்டில் தவித்து வரும் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், இப்போட்டியிலும் 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். குறிப்பாக ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பேசுபொருளாகியுள்ளது.
அஸ்மத்துல்லா உமர்சாய் ஓவரில் இறங்கி வந்து அடிக்க முயன்ற பண்டின் பேட் அவர் கையை விட்டு நழுவி ஸ்கொயர் லெக் சைடில் பறந்தது. அதே சமயம் பேட்டில் பட்டு இடது பக்கம் பிறந்த பந்தை ஷஷாங்க் சிங் கேட்ச் பிடித்தார்.
இதனையடுத்து, கடந்த சீசன்களில் பந்தை பறக்கவிட்டு பண்ட் இப்போது பேட்டை பறக்கவிட்டு அவுட்டாகி வருகிறார் என்று நெட்டிசன்கள் அவரை இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு (27 கோடி ரூபாய் ) ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட் தான் குறிப்பிடத்தக்கது.