சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது.
இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சின்னர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து அல்காரஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.