ஒரே ஓவர்ல 4 சிக்ஸ் அடிப்பேன்னு சொல்லி 5 சிக்ஸ் அடிச்சிட்டான் – பராக்கின் பழைய பதிவு!!

சென்னை:
18-வது ஐ.பி.எல். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார்.

அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். மேலும் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் பராக் சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு எக்ஸ் பக்கத்தில் ரியான் பராக் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பராக் அந்த பதிவில், “ஐபிஎல் தொடரில் ஒருநாள் என்னால் ஒரே ஓவரில் 4 சிக்சர் அடிக்க முடியும் என்று என்னுடைய உள்மனது சொல்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

2023 ஆம் ஆண்டு பராக்கின் இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். ஆனால் தற்போது இப்போது ஒரே ஓவரில் 5 சிக்சரும் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்சரும் அடித்து தன்னை கிண்டலடித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *