ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.
டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன விராட் கோலி 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இன்றைய போட்டியில் மேத்யூ ஷார்ட் வேகமாக அடித்த பந்தை விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
கேட்ச் பிடித்த பின்பு அந்த பந்தை அம்பயரிடம் தூக்கி வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வரை ஆஸ்திரலியா அணி 44 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் அடித்துள்ளது.