கோவை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 9 பேருக்கும் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கோரியுள்ளோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பொள்ளாச்சி வழக்கில் மதியம் 12 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி சுதந்திரமாக சாட்சி அளித்துள்ளனர். இந்த வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்க கூடாது, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என கூறினார்.