கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு People of Annamalai என்ற இயக்கம் மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது கண்டித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையில் பதாகைகள் வைத்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உறுப்பினர்:- மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றும் அதற்கு காரணம் தேர்தல் அதிகாரிகளும்,மாநகராட்சி அதிகாரிகள் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்தும்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது.ஆனால் இந்த முறை நீக்கிவிட்டதாக கூறினார்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு பூத்தில் 830 ஓட்டு காணவில்லை என்றும் இதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்வு வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
இது போல் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் இல்லை என்று கூறினார். மேலும் வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதுபோல தவறு நடக்காமல் தேர்தல் அதிகாரிகள் முறையாக செயல்பட்டு விட்டுப் போன வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களின் கைகளில் ஓட்டுப்போட்ட மை இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.