ஊழல் இல்லாமல் ராணுவ தளவாடங்கள் வாங்கப்பட்டதால் நாம் இன்று எதிரியை பலமாக வீழ்த்தி வருகிறோம் – தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டி!!

சென்னை:
குடியாத்தத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய 500 வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் முக்கியமான வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை.

உபரி மின்சாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மின்தடை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு எனது வீட்டிலேயே மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை. ஆள் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை எனக் கூறி வருகிறார்கள்.

ஆயிரம் ரூபாய் திட்டம் முறையாக பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. எந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு துறை அமைச்சரிடமும் துறைகள் பிடுங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அமைச்சரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இன்னும் பத்து மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு அமைச்சரின் பிரச்னையை தீர்ப்பதற்கே முதல்வருக்கு நேரம் சரியாகி விடும். அமைச்சர்கள் சுருட்டிய பணத்தில் பல பட்ஜெட் போடலாம்.

மோடி அரசில் உள்ள ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஊழல் இல்லாமல் ராணுவ தளவாடங்கள் வாங்கப்பட்டதால் இன்று நாம் எதிரியை பலமாக வீழ்த்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *