டெல்லி;
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது.
இதனை தொடர்ந்து உலக நாடுகள் சண்டையை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன.
அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து நடத்திய தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளரும் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் உடன் சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.