சென்னை;
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘மாமன்’. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படம் வெளியான 5 நாட்களில் (நேற்றுவரை) மொத்தமாக ரூ. 17 கோடி வரை வசூல் செய்துள்ளது.