சென்னை:
சி.பா. ஆதித்தனார் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அரசியல் லாபத்திற்காக பாஜக திமுக வுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறது. ஆப்ரேசன் சிந்தூரை ஆதரித்து முதலில் பேரணி நடத்தியது ஸ்டாலின் தான். பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட பேரணி நடத்தவில்லை.
இந்தியாவின் பதில் தாக்குதலை ஆதரித்து சென்னையில் திமுக நடத்திய பேரணியில் அரசியல் உள்ளது. போருக்கு ஆதரவாக பேரணியை நடத்திய முதலாவது நபர் ஸ்டாலின் தான்.
இந்தியா பாகிஸ்தான் போரில் என்ன நியாயம் இருக்கிறது? எத்தனை தீவிரவாதிகள் சுடபட்டனர்? இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை என்ன செய்தீர்கள்? எந்த தகவலும் இல்லை
நாம் தமிழர் கட்சியில் ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். ஆகச் சிறந்த ஆளுமைகள் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள்.
அதில் 134 பேர் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். 2026 தமிழ்த்தேசிய வாதிகளுக்கான களம். 3 நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் இப்பொழுது மட்டும் ஏன் செல்கிறார் ? ED ரைட் வந்தால் ஓடிப் போய் மோடியை சந்திக்கிறீர்கள்” என்றார்.