”விராட் கோலியின் புதிய ஹேர் கட்” !!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 -ல் விராட் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக விராட் கோலி களமிறங்கும்போது, அவரது புதிய சிகை அலங்கார தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளது.

பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் , விராட் கோலியின் புதிய ‘ஹேர் கட்’ புகைப்படத்தை தற்போது ‘இன்ஸ்டாகிராமில்’ பகிர்ந்துள்ளார். இது வெளியான சிறிது நேரத்தில் வைரலாகியுள்ளது. விராட் கோலியின் புத்தம் புதிய ‘ஹேர் ஸ்டைலிங்’ மிகவும் வித்தியாசமாக உள்ளது.

கடந்த மாதம் விராட் கோலி 2-வது முறையாக தந்தையானார். இதனால் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் அவர் ஐ.பி.எல். 2024 போட்டி மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்.

பிரபல ஹேர்-ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் கோலியின் புதிய தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *