டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி !!

சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.


சின்னசாமி மைதானம் அல்லாத மற்ற மைதானங்களில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பெங்களூரு அணியை முதல்முறையாக ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது.

இப்போட்டியில் விராட் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.


இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *