குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட் டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளவும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின் விநியோகம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் குடிநீர் தேவை குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்; கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும்; அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது .

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்னை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்; கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் கிடைப்பதை |உறுதிப்படுத்த வேண்டும்; கோடையில் தண்ணீர் தேவை அதிகம் – கிடைப்பது குறைவு என்பதால் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுக என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *