ஒவ்வொரு வீரரும் சரியான நேரத்தில் முன்னேறினர் – பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் …..

ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை இந்தியன்சை வீழ்த்திய பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-


ஒவ்வொரு வீரரும் சரியான நேரத்தில் முன்னேறினர். முதல் போட்டியில் இருந்தே எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம். பயிற்சியாளர்கள் குழு மற்றும் அணி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்கள்.

ரிக்கி பாண்டிங் வீரர்களை நிர்வகிப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நம்பிக்கை பெறுவதும் முக்கியம். தொடக்க வெற்றிகளால் அது நடந்தது. பிரியான்ஷ் தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது. இளம் வீரர்கள் பயமற்றவர்கள்.

இங்கிலீஸ் மட்டுமே அவரது இடம் மாறி மாறி விளையாடினார். அவர் புதிய பந்தை விளையாடுவதை விரும்புவதால், அவரை அதிக பந்துகள் விளையாட வைக்க விரும்பினேன்.

அது அற்புதமாக வேலை செய்தது. ரிக்கி பாண்டிங்கும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நட்புறவை பராமரித்து வருகிறோம். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *