சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்ததால் மாணவர்கள் தங்களின் விடுமுறையில் செய்தவற்றை நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகளை வழங்கினார்.
இதனிடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.