ஏபி டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை முறியடித்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் !!

சென்னை:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்த போது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்கள் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்..

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த மிடில் ஆர்டர் வீரர்

சூர்யகுமார் யாதவ் – 717 ரன்கள் (2025)

ஏபி டி வில்லியர்ஸ் – 687 ரன்கள் (2016)

ரிஷப் பண்ட் – 684 ரன்கள் (2018)

கேன் வில்லியம்சன் – 622 ரன்கள் (2018)

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *