பல்வேறு சர்ச்சைக்கு நடுவிலும் ஜாலியாக சுற்றும் ரவி மோகன் – கெனிஷா ஜோடி !!

சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் நீக்கினார்கள்.

பல்வேறு சர்ச்சைக்கு நடுவிலும் ரவி மோகன் – கெனிஷா ஜோடி நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். சமீபத்தில் கூட சென்னையில் நடந்த ரூ.3 கோடி பரிசுக்கான சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.

தனித்தனி காரில் வந்து இறங்கினாலும், நிகழ்ச்சியில் ஒன்றாகவே பேசி சிரித்து கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக ரவி மோகன் பேசும்போது, கிரிக்கெட் தொடர்பான தகவல்களை மட்டும் குறிப்பிட்டார். மற்ற கேள்விகளையும் தவிர்த்துவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *