சென்னை:
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தே.மு.தி.க.வுக்கு அடுத்த ஆண்டே ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறியதால் பொதுச்செயலாளர் பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம்,
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். கூட்டணிக்கு அவரை வரவேற்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
- இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
- என்னைப் பொறுத்தவரை அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.