மதுரை;
மதுரையில் நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வந்தார்.
அவர் நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அமித் ஷாவை மதுரை ஆதீனம் சால்வை அணிவித்து வரவேற்று புத்தகம் மற்றும் மனுவை வழங்கினார்.
பின்னர் மதுரை ஆதீனம் கூறுகையில், “பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்போதும் அவரை சந்தித்து பேசினேன். இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார்.
அவரை கோயில் முன்பு வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அமித் ஷாவிடம் மனு ஒன்றை அளித்தேன்.
அதில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்கவும், மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.