சென்னை ;
பிரபல நடிகை சமந்தா தனது முதுகில் குத்தியிருந்த ‘YMC’ டாட்டூ காணாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த ‘ஏ மாயா சேசாவே’ (YMC) திரைப்படத்தின் நினைவாக இந்த டாட்டூவை அவர் குத்தியிருந்தார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்த டாட்டூ இல்லாததால், அதை அவர் நிரந்தரமாக நீக்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மெரூன் நிற முதுகு இல்லாத உடையணிந்து “மறைக்க எதுவுமில்லை” என்று ஸ்க்ரீனில் எழுதினார்.
ஆனால், ரசிகர்களின் கவனம் அவரது மேல் முதுகில் இருந்த ‘YMC’ டாட்டூவின் மீது விழுந்தது. டாட்டூ தெரியாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.