புதிதாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு ‘கேக் அலங்காரம்’ பற்றிய சில ஆலோசனைகள்…

பெண்கள் பலரும் ‘கேக்’ தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள். கேக்குகளை சுவைப்பதற்கு முன்பாக, அவற்றின் மேல் செய்யப்படும் அலங்காரம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்படி செய்கிறது. தயாரிப்பில் புதிதாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு ‘கேக் அலங்காரம்’ பற்றிய சில ஆலோசனைகள்…

புரூட் கேக்

வெள்ளை நிற கேக்கின் மேல் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும் மாதுனை முத்துகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும். அதைச் சுற்றிலும் சிறிய அளவுள்ள சர்க்கரை முத்துகளை தூவவும். இது பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சி அளிக்கும்.

சாக்லெட் மற்றும் ஸ்பிரிங்கஸ் கேக்

கேக்கின் மேல் பகுதியை தவிர்த்து, பக்கவாட்டுப் பகுதியைச் சுற்றிலும் சாக்லெட், ஸ்பிரிங்கஸ் (சிறிய அளவு சர்க்கரை பூக்கள்) மற்றும் கான்பெட்டி (வண்ணமயமான சாக்லேட் துணுக்குகள்) ஆகியவற்றை கொண்டு கேக்கை அலங்கரிக்கவும். அது பார்ப்பதற்கு வண்ணமயமான தோற்றத்தைத் தரும்.

ரோஸ் கேக்

‘கேக்’ அலங்கரிக்கும் ஐசிங் முனைகள் கொண்டு கேக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரையிலும் ‘ஐசிங் கிரிம் மூலம் ரோஜா பூக்கள் போன்று வடிவமைக்கவும். ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு அலங்கரித்தால் அழகாக இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி கேக்

வெனிலா கேக்கின் மேல்பகுதியின் மையத்தில் ஸ்ட்ராபெர்ரி கிரீமை பூசவும், அதற்கு மேல் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும், இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும் பெர்ரி பழங்கள், உண்ணக்கூடிய ரோஜா பூக்கள் மற்றும் ஸ்டாப்பேரி இலைகளை வைக்கவும் இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும்.

பைப்பிங் கேக்:

‘கேக்’கின் நிறத்துக்கு ஏற்றவாறு டபுள் கலர் கிரீமைகொண்டு மேல் பகுதியில் பைப்பிங் செய்யவும். அது பார்ப்பதற்கு எளிமையாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

டஸ்டிங் பவுடர் கேக்:

கேக்கின் மீது பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் அல்லது உண்ணக்கூடிய மினுமினுப்பு கிளிட்டர்களை லேசாக தெளிக்கவும். இது எளிதாக செய்யக் கூடிய அலங்காரமாகும்.

மக்ரூன்ஸ் கேக்:

கேக்’கின் மேல்புறத்தில் மக்ரூன்களை கொண்டு பூ போன்ற வடிவத்தில் அடுக்கவும். கேக்கின் பக்க வாட்டுப் பகுதியையும் மக்ரூன்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

பாஸ்கெட் வீவ் கேக்:

கேக்கைச் சுற்றிலும் ‘பாஸ்கெட் வீவ் (கூடை பின்னுவது போன்ற அமைப்பு) பைப்பிங் செய்யவும். பின்பு கிரீம் கொண்டு கேக்கின் மேலே ரோஜா பூக்கள் வடிவமைக்கவும். வெள்ளை நிற முத்துக்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.

பான்டன்ட் ரிப்பன் கேக்:

‘பான்டன்ட் ரிப்பன்’ மூலம் வடிவமைத்த ரோஜாக் களைக் கொண்டு ‘கேக்’கைச் சுற்றி வட்ட வடிவில் அலங்கரிக்கவும். பின்பு ‘கேக்’கின் மேல் ஸ்பிரிங்கின்ஸ் அல்லது வெள்ளி நிற பால்களை தூவவும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *