பெண்​களை மதிக்​க​வும், அவர்​களுக்கு சம உரிமை வழங்​க​வும் வீட்​டில் ஆண் பிள்​ளை​களுக்கு கற்​றுக்​கொடுக்க வேண்​டும் என அறிவுறுத்தல் – அமைச்சர் கீதா ஜீவன்!!

சென்னை:
பெண்​களை மதிக்​க​வும், அவர்​களுக்கு சம உரிமை வழங்​க​வும் வீட்​டில் ஆண் பிள்​ளை​களுக்கு கற்​றுக்​கொடுக்க வேண்​டும் என அமைச்​சர் கீதா ஜீவன் அறி​வுறுத்​தி உள்​ளார்.

தமிழ்​நாடு வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் நல அறக்​கட்​டளை மற்​றும் தேசிய வீட்டு வேலை தொழிலா​ளர் இயக்​கம் ஆகியவை சார்​பில், ‘கண்​ணி​ய​மும் நியா​மும் நிறைந்த எதிர்​காலத்தை நோக்​கி’ என்ற தலைப்​பில் சர்​வ​தேச வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் தினம், சென்னை தி.நகரில் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதில் கலந்து கொண்ட சமூக நலத்​துறை அமைச்​சர் கீதாஜீவன் 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று 500 மதிப்​பெண்​களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களை சேர்ந்த 25 மாணவ, மாணவி​களுக்கு பரிசு வழங்​கி​னார்.

தொடர்ந்து, நியாய​மான பணிச்​சூழல்​கள், நல்ல ஊதி​யம், சட்​டப்பாது​காப்​பு, சமூக பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக வீட்டு வேலைத் தொழிலா​ளர்​களுக்​கான வலு​வான சட்​டத்தை தமிழகத்​தில் இயற்ற வலி​யுறுத்தி அமைச்​சர் கீதா ஜீவனிடம், வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் சார்​பில் கோரிக்கை மனு வழங்​கப்​பட்​டது.

பின்​னர் நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் கீதா ஜீவன் பேசி​ய​தாவது: பொது​வாகவே பெண்​களின் உழைப்​புக்கு உரிய அங்​கீ​காரம் எங்​கே​யும் கிடைத்​த​தில்​லை.

ஆனால், புதுமை பெண்​கள் திட்​டம், மகளிர் உரிமை தொகை திட்​டம் என பெண்​களை மையப்​படுத்தி அதி​களவி​லான திட்​டங்​களை முதல்​வர் ஸ்​டா​லின் செயல்​படுத்தி வரு​கிறார். பெண்​களுக்கு எதி​ரான குற்​றச்​செயல்​களில் ஈடு​படு​வோருக்​கான தண்​டனையை இரண்டு மடங்​காக அதி​கரித்​துள்​ளார்.

அதே​நேரம், சமூக மாற்​ற​மும் ஏற்பட வேண்​டும். பெண்​களை மதிக்​க​வும், அவர்​களுக்கு சம உரிமை வழங்​க​வும்வீட்​டில் உள்ள ஆண் பிள்​ளை​களுக்கு கற்​றுக்​கொடுக்க வேண்​டும். சமூக வலை​தளங்​களில் அதி​கள​வில் பொய்​யான தகவல்​கள் பரப்​பப்​படு​கின்​றன.

எனவே பிள்​ளை​களின் மீதான கண்​காணிப்பு மிக​வும் அவசி​யம். பெண்சமு​தா​யம் முன்​னேறி​னால், தமிழ் சமு​தா​யம் முன்​னேறும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில், சசி​காந்த் செந்​தில் எம்​பி, தமிழ்​நாடு வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் நலஅறக்​கட்​டளை தலை​வர் ஜோசபின் அமலா வளர்​ம​தி, அறங்​காவலர் எஸ்​கலின் மிராண்​டா, மாவட்ட சட்ட சேவை​கள் ஆணை​யத்​தின் துணை செயலர் எஸ்​.வெங்​கடலட்​சுமி, தமிழ்​நாடு வீட்டு வேலைத் தொழிலா​ளர் நல வாரி​யத்​தின் செயலர் டி.தர்​மசீலன், ஜெ.கருணாநிதி எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *