திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தின்​போது தமிழில் மந்​திரங்​கள் ஓதப்​படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

மதுரை: ​
திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தின்​போது தமிழில் மந்​திரங்​கள் ஓதப்​படும் என்று உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஆழ்​வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், ‘திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடை​பெறுகிறது.

கும்​பாபிஷேகத்​தின்போது யாக​சாலை, கரு​வறை, கோபுர விமான பூஜை​யில் தமிழில் மந்​திரங்​கள் ஓதுமாறு உத்​தர​விட வேண்​டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​. சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரிய கிளாட் அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அரசு தரப்​பில், “யாக​சாலை​யில் மந்​திரங்​கள் ஓது​வது தொடங்கி, திரு​முறை பாடு​வது, திருப்​பு​கழ் பாடு​வது, 64 ஓது​வார்​கள் பூஜை செய்​வது ஆகிய நிகழ்​வு​கள் தமிழ் மொழி​யில் நடை​பெறும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

இதை பதில் மனு​வாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகம் தொடர்​பாக நிலு​வையில் இருக்​கும் மனுக்களு​டன் சேர்த்து ஜூலை 2-ம் தேதி விசா​ரணைக்​குப் பட்​டியலிட நீதிப​தி​கள் உத்தர​விட்​டனர்.

இதற்கிடையே கும்​பாபிஷேகம் நடை​பெறும் நேரத்தை மாற்​றக்கோரி சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்​திரி, உயர் நீதி​மன்ற அமர்​வில் மனு தாக்கல் செய்தார். இதை விசா​ரித்த உயர்நீதிமன்​றம், கும்​பாபிஷேக நேரத்தை முடிவு செய்யசபரிமலை மேல் சாந்தி தலை​மையில் குழு அமைத்து உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, அந்​தக் குழு கூடி, ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை கும்​பாபிஷேகம் நடத்த முடிவு செய்​தது. இந்த நேரத்​துக்​கு, குழு​வில் இடம் பெற்​றிருந்த சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்​திரி ஆட்​சேபம் தெரி​வித்​தார். இருப்​பினும் மேல்​சாந்தி குறித்த நேரமே இறுதி செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், கும்​பாபிஷேக நேரத்தை மாற்​றக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்​திரி சீராய்வு மனு​வைத் தாக்​கல் செய்​தார்.

அதில் “ஜூலை 7-ம் தேதி பகல் 12.05 மணி முதல் 12.47 மணி​தான் முகூர்த்த நேரம். தோஷங்​கள் இல்லாத இந்த நேரத்​தில் கும்பா​பிஷேகம் நடத்த உத்​தர​விடவேண்​டும். அது​வரை கும்​பாபிஷேக அழைப்​பிதழ் வழங்​கத் தடை விதிக்க வேண்​டும்” எனக் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​. ம​தி, ஆர்​.​விஜயகு​மார் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “நீ​தி​மன்​றம் அமைத்த குழு கும்​பாபிஷேக நேரத்தை முடிவு செய்​துள்​ளது. அந்த நேரத்​தில் கும்​பாபிஷேகம் நடத்​தலாம்.

கும்​பாபிஷேகத்​தைப் பொறுத்​தவரை, கோயில் விதாயகர் குறிக்​கும் நேரம்​தான் முக்​கி​யம். இனி வரும் காலங்​களில் கோயில் விதாயகர் குறிப்​பிடும் நேரத்தை எழுத்​துப்பூர்​வ​மாக பெற்​று, அந்த நேரத்​தில் கும்​பாபிஷேகம் நடத்த வேண்​டும்” என உத்​தரவிட்​டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *