மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும் என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி. தினகரன் கருத்து!!

சேலம்:
மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும் என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி. தினகரன் கூறி​னார். சேலத்​தில் அமமுக செயல் வீரர்​கள் கூட்​டம், மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.கே.செல்​வம் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்ற டிடி​வி.​தினகரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டுக்கு இந்து முன்​னணி, ஆர்​எஸ்​எஸ் மற்​றும் பாஜக சார்​பில் அழைப்பு விடுத்​தனர். ஆனால், வேலை காரண​மாக மாநாட்​டுக்கு செல்​ல​வில்​லை. இந்த மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும். இது வருத்​தமளிப்​ப​தாக உள்​ளது.

அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் சபை நாகரி​கம் கருதி அங்கு அமை​தி​யாக இருந்​துள்​ளனர். திமுக நிர்​வாகி​களை​கூட மாநாட்​டுக்கு அழைத்​துள்​ளனர். அப்​படி அழைத்​து​விட்​டு, அந்த வீடியோவை ஒளிபரப்​பியதை ஏற்​க​முடி​யாது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சீட் பெறு​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் தேர்​தல் நேரத்​தில் பேசி முடி​வெடுப்​போம். திமுகவை வீழ்த்த வேண்​டும் என்ற ஒரே குறிக்​கோளு​டன் நாங்​கள் செயல்​பட்டு வரு​கிறோம்.

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. போதை கலாச்​சா​ரம் அதி​கரித்​துள்​ளது. தேர்​தல் வாக்​குறு​தி​கள் எதை​யும் திமுக நிறைவேற்​ற​வில்​லை. விலை​வாசி கடுமை​யாக உயர்ந்​துள்​ளது.

திமுக​வுக்கு ஆதர​வாக வரும் கருத்​துக் கணிப்​பு​கள், கருத்து திணிப்​பாகவே உள்​ளது. திமுக ஆட்சி மீது மக்​கள் கோபத்​தில் உள்​ள​தால், தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யைப் பிடிக்​கும். இந்​துக்​கள் குறித்து இழி​வாகப் பேசி​னால், மற்ற மதத்​தினர் வாக்​களிப்​பர் என்று சிலர் கருதுகின்​றனர். அது தவறானது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *