ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட ரயில்களை பார்வையிட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா!!

சென்னை: ​
விரைவு ரயில் கட்​ட​ணத்தை உயர்த்​தும் திட்​டம் பரிசீலனை​யில் உள்​ளது. பிரதமரும், ரயில்வே அமைச்​சரும் இதுகுறித்து முடிவு செய்து ஜூலை 1-ம் தேதி அறி​விப்​பார்​கள். கட்டண உயர்வை எதிர்க்​கும் முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்​டோர் கள உண்​மையை உணர வேண்​டும் என்று ரயில்வே இணை அமைச்​சர் சோமண்ணா தெரி​வித்​துள்​ளார்.

சென்னை ஐசிஎப் ஆலை​யில் வந்தே பாரத் ரயில் (ஸ்​லீப்​பர் வகை), அம்​ரித் பாரத் ரயில், ஹைட்​ரஜன் ரயில் உள்​ளிட்ட ரயில்​களின் தயாரிப்பு பணி​கள் நடந்து வரு​கின்​றன. இந்த பணி​களை மத்​திய ரயில்வே இணை அமைச்​சர் சோமண்ணா நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நடப்பு நிதி ஆண்​டில் 88 வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது, 9 வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பிரதமர் மோடி ஆட்​சி​யில் ரயில்வே துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்​துள்​ளது. விரைவு ரயில்​களில் கி.மீ.க்கு ஒரு பைசா மட்​டுமே உயர்த்​தும் திட்​டம் தற்​போது பரிசீலனை​யில் உள்​ளது.

பிரதமர் மோடி​யும், ரயில்வே அமைச்​சரும் இதுகுறித்து முடிவு செய்​து, ஜூலை 1-ம் தேதிஅறி​விப்​பார்​கள். ரயில்​களில் குறைந்த கட்​ட​ணமே வசூலிக்​கப்​படு​கிறது. ஏழை மக்​களின் நலனை கருத்​தில் கொண்​டு, தற்​போதும் சாதாரண ரயில்​களில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட​வில்​லை.

கட்டண உயர்வை எதிர்க்​கும் முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்​டோர் கள உண்​மையை உணர வேண்​டும்.இவ்​வாறு அவர் கூறி​னார். ஐசிஎப் பொது மேலா​ளர்​ சுப்​பா​ராவ்​ உள்​ளிட்​டோர்​ உடன்​ இருந்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *