தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் – அமித்ஷா திட்டவட்டம்…..

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாகய கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா? என்கிற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகிவிம் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும். அதில் பாஜக -வின் பங்கு இருக்கும். தேர்த்லில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிருகிறோம். முதல் அமைச்சர் அதிமுகவில் இருந்து வருவார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யாரையும் நான் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்கள் கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்து திருப்தியாக இருக்கிறீர்களா? என்கிற கேள்விக்கு “உன் நம்பிக்கை என்னவென்றால், அதிமுக மற்றும் பாஜக., அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவலான நிலையில் இருக்கிறது” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *