ஈரோடு
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள்.
அவ்வகையில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி திதி இரண்டும் இணைந்து வந்ததால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் மலைக் கோவிலில் திரண்டனர்.
காலையில் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.
பல்வேறு ஊர்களிலிருந்து காவடி எடுத்து பொதுமக்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் பஸ் இயக்கப்பட்டது.