புதிய படத்தில் நிவினுடன் நடிக்கும் நயன்தாரா !!

2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘லவ் ஆக்ஷன் டிராமா’. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்குகிறார்கள்.

பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நயன்தாரா இப்படத்தில் நடிக்க போகிறார் என்பதை படக்குழுவினர் ஒரு வீடியோவின் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

அதில் பேப்பரில் இங்க் ஊற்றி நயந்தாராவின் புகைப்படம் தெரிகிறது. இந்த வீடியோவை நிவின் பாலி அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *