சேலம்,
மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் பிசினஸ் ” அதிகபட்ச மைலேஜ் பெறுங்கள் அல்லது டிரக்கைத் திருப்பிக் கொடுங்கள்.” எனும் தனித்துவமான உத்தரவாதத்துடன் ஆதரிக்கப்பட்ட ஒரு நவீன இலகுரக வணிக வாகன டிரக்குகளின் ஒரு அதிநவீன வரம்பான மஹிந்திரா ஃபியூரியோ 8-ன் வணிக ரீதியான அறிமுகத்தை அறிவித்துள்ளது.
இலகுரக வணிக வாகன பிரிவில் உள்ள பல்வேறு வணிக பயன்பாடுகளுக்கு உதவுகின்ற வகையில், மகாராஷ்டிராவின் சாக்கன் இல் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஃபியூரியோ 8, 4-டயர் கார்கோ மற்றும் 6-டயர் கார்கோ என இரண்டு வகைகளில் வருகிறது.
அதிக லாபத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட ஃபியூரியோ 8, வகுப்பில் சிறந்த மைலேஜ், அதிக சுமை தாங்கும் திறன் மற்றும் உகந்த சௌகரியம், வசதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு அதிநவீன கேபினை வழங்குகிறது. அதன் தோற்கடிக்க முடியாத நன்மைகளின் தொகுப்பைக் கொண்டு, ஃபியூரியோ 8, அதன் பிரிவில் அதிக லாபத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரக்ஸ், பஸ்சஸ் கன்ஸ்ட்ரக்ஷன் இக்விப்மென்ட், ஏரோஸ்பேஸ் & டிஃபென்ஸ் துறைத் தலைவரும் மஹிந்திரா குழுமத்தின் குழும நிர்வாக குழு உறுப்பினருமான வினோத் சஹாய் இந்த புதிய வரம்பு அறிமுக நிகழ்வு குறித்து பேசுகையில், “‘அதிகபட்ச மைலேஜ் பெறுங்கள் அல்லது டிரக்கைத் திருப்பிக் கொடுங்கள்’ என்ற உத்தரவாதத்துடன் கூடிய இந்த புதிய மஹிந்திரா ஃபியூரியோ 8 இலகுரக வணிக வாகன டிரக்குகளின் இந்த அறிமுகமானது, எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த வகையில் தங்கள் ஃபியூரியோ 8 இலிருந்து அதிகபட்ச இயக்க லாபத்தைப் பெற உதவும்.
இந்த புதிய டிரக் வரிசை, இந்தப் பிரிவின் மீதான எங்கள் தீவிர அர்ப்பணிப்பையும் எங்கள் தயாரிப்புகள் மீதான நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்ற அதே வேளையில் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளர் மைய்யப்படுத்தப்பட்ட அணுகுமுறை ஆகியவற்றின் புதிய தரநிலைகளை அமைக்கிறது.
” என்று கூறினார்.ஃபியூரியோ 8 பணிமனைகளில் 36 மணி உத்தரவாதமான பணிநிறுத்த நேரம் அல்லது கூடுதல் நாளுக்கு ரூ. 3000/-; 48 மணி நேரத்தில் மீண்டும் சாலைக்கு வரும் அல்லது கூடுதல் நாளுக்கு ரூ. 1000/- ஆகிய இரட்டை சேவை உத்தரவாதங்களுடன் ஃபியூரியோ 8 வருகிறது.
மேலும், ஃபியூரியோ 8 இந்தியாவின் மிகவும் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பமான, இருப்பிட கண்காணிப்பு, ஜியோஃபென்ஸிங், வாகன தகவு கண்காணிப்பு, ஓட்டுநர் செயல்திறன் பகுப்பாய்வு, ஃப்ளீட் டேஷ்போர்டுகள் மற்றும் பலவற்றை வழங்குகிற மஹிந்திரா ஐமேக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.