கான்பூர் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அந்த பெண் துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு நடனமாடுவதை கண்டு, நெட்டிசன்கள் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
அவர் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா என விசாரணை செய்ய வேண்டும் என்றும், வாகனங்களில் செல்பவர்களை பயமுறுத்தும் வகையில் இந்த ரீல்ஸ் வீடியோ இருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகளை டேக் செய்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷாலினி பாண்டே என்றும், அவர் ஏற்கனவே சில சர்ச்சைக்குரிய வீடியோக்களைப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லக்னோ காவல்துறை இந்த வீடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.