சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்…

சென்னை:
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றி பல பிரபல இயக்குநர்கள் பாராட்டி புகழ்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசினர்.

திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சசிகுமார் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
“2010 ஆம் ஆண்டு நீங்கள் ஒரு பீரயட் கதையான ராஜா ராணி கதையை வைத்து இருந்தீங்க. அதனை சூர்யா மற்றும் விஜயிடம் சொன்னீங்க. அதுக்கு அப்பறம் பெரிய கேப் ஆயிடுச்சு இன்னமும் அந்த கதைய வச்சுருகீங்களா?” என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு அவர் ” கதை இன்னும் அப்படியே இருக்குது சார். கண்டிப்பா அந்த படத்த நான் இயக்குவேன். கதைக்கான கதாநாயகனை அது தேர்வு செய்யனும்.

இந்த படத்த இயக்குவதுக்கு முன்னாடி இன்னொரு ஒரு கிராமத்துல நடக்குற மாதிரி பீரியட் திரைப்படம் இயக்கப்போறேன். அதுக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.

இந்த வருஷ கடைசியில் அல்லது அடுத்தாண்டு ஜனவரி அப்படத்தோட ஷூட்டிங் பணிகள் தொடங்கிடுவேன்” என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *