சென்னை ;
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்த வருகிறார் நடிகர் அஜித். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அசர்பைஜன் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2வது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது.
இந்நிலையில் திடீரென நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து நடிகர் அஜித்தின் மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான சுரேஷ் சந்திரா, வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றே அஜித் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.